இதில் மூத்த மகன் சந்துரு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இளைய மகனான சந்தோஷ் வயது 10 அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் பார்ப்பதற்காக திரை அமைக்கப்பட்டு திரைப்படம் காண்பிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்க்க சந்தோஷ் மற்றும் சந்துரு தனது நண்பர்களுடன் கோவில் அருகாமையில் தனது வீட்டில் எதிரே உள்ள மணல் கொட்டப்பட்ட இடத்த அருகே சாலையோரத்தில் தார்ப்பாயில் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம் குறிஞ்சிப்பாடி நோக்கி செல்ல வெங்கடா பேட்டை மெயின் ரோடு அருகே வருவதற்காக அப்பகுதியை கடந்த பொழுது சாலையோரத்தில் அமர்ந்து படம் பார்த்து வந்த சிறுவன் சந்தோஷ் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவன் உயிரிழந்தார் பின்னர் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவின் போது படம் பார்க்கச் சென்ற சிறுவன் டாட்டா ஏசி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment