சேத்தியாதோப்பு பகுதியில்இரு வேறு இடங்களில் பணம் பறிமுதல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 March 2024

சேத்தியாதோப்பு பகுதியில்இரு வேறு இடங்களில் பணம் பறிமுதல்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடுப்பகுதியில் சிறிய சரக்கு வாகனத்தில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 1,55, 272 , ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகே எவ்வித ஆவணங்களும் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட கோவை ஒத்தக்கடை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கொண்டு சென்ற 57,000 ஆயிரம் ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 2,12,272 ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அவை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/