வடலூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 March 2024

வடலூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கூட்டணி கட்சிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் முன்னிலை வகித்தார், கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நெய்வேலி சபா.ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், திராவிடகழக மாநிலபொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன், செல்வன், காங்கிரஸ், மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில உறுப்பினர் மணிவாசகம், மதிமுக, மாநில நிர்வாகி பிச்சை,மாவட்ட செயலாளர்  என்.ஆர். ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகட்சியின் எம் எல் ஏ சிந்தனைச் செல்வன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் , மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள் மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்ற மாநிலங்களின் அதிகார உரிமைகளை பாதுகாக்க இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ள நாட்டின் நலனில் அக்கறை கொண்ட முற்போக்கு கொள்கை கொண்ட இயக்கங்களை இணைத்து மாபெரும் கூட்டணியை, இந்தியா கூட்டணியாக உருவாக்க காரணமாணவர்களில் முதன்மையாக திகழும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக களம், இந்தியாவை மீட்பதற்கான அறப்போர் களம். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சி கருத்தியலை காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் மு.க ஸ்டாலின்  அவர்கள் 


தலைமையிலான கொள்கைக் கூட்டணியான இந்தியா கூட்டணி தமிழ்நாடு புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாடும் நமதே, நாற்பதும் நமதே கொள்கை கூட்டணியின் வெற்றி முழக்கம் கேட்கும்படி நமது மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் சிதம்பரம்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், கடலூர் டாக்டர்.விஷ்ணுபிரசாத் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற தீவிர களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது.


மேலும் வாக்காள பெருமக்களின் ஆதரவை திரட்டிடவும், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் கழகத்தலைவர் முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் வருகைத்தர உள்ளார்கள்.  கடலூர், சிதம்பரம் தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 5,6 தேதிகளில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களை சந்திக்க உள்ளார்கள்.  கூட்டத்தை சிறப்பாக லட்சக்கணக்கான மக்கள் தலைவரின் உரை கேட்கும் வண்ணம் சிறப்பாக நடத்துவது என்றும், கூட்டணி இயக்க தலைவர்களின் பிரச்சார பயணங்களையும் எழுச்சியுடன் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் முழுவதும் கொள்கை கூட்டணியினர் ஒன்றிணைந்து தீவிர பிரச்சாரங்களாக தெருமுனைக் கூட்டங்கள், வீடு, வீடாக சென்று துண்டறிக்கைகள் கொடுத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்வது என்றும், எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி வெற்றிக்கான பணிகளை செய்து வாக்கு சேகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

*/