இந்நிலையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18 எட்டு ரோட்டில் உள்ள காவடி விநாயகர் ஆலயத்தில் இருந்து 1950 காவடி மற்றும் 650 பால்குடம் பக்தர்கள் எடுத்து மத்திய பேருந்து நிலையம் வழியாக வட்டம் 16-ல் உள்ள வேலுடையான் பட்டு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தடைந்ததனர். பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் நெய்வேலி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காவடிகள், பால்குடங்கள் எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் தலைமையில் சுமார் 250 க்கும் மேற்பட்ட போலீசார், என்எல்சி செக்யூரிட்டி ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நெய்வேலி நகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பில் இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி
No comments:
Post a Comment