கடலூர் மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் முல்லை மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாகவும் வடலூரில் சர்வதேச மகளிர் தினம் மாவட்ட செயலாளர் சே.பரமேஸ்வரி அவர்கள் தலைமையிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை செயலாளருமான முனைவர் ஏ சி டி தன கேசவமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் மாவட்ட பொருளாளர் த.ஜெயபிரகதி கிளை செயலாளர் ராமு வரவேற்றனர்.
துவக்கத்தில் வடலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் சமேதா அவர்கள் கொடி அசைத்து வைத்து பேரணி துவக்கி பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினார் இக்கூட்டத்தில் கிளை உறுப்பினர் நிதிஸ்ரீ செவ்வந்தி அருண் பாலாஜி வானவில் மன்ற கருத்தாளர்கள் கோபிநாத் பரிமளா சின்னராஜ் பாலமுருகன் சந்தியா , பண்ருட்டி கிளை செயளாலர் ராஜேஷ் மற்றும் துளிர் இல்லம் ஒருங்கிணைப்பாளர் சசிதேவிஆகியோர் கலந்து கொண்டனர்.
கலைக்குழு தேவா வெண்முகில் காயத்ரி மற்றும் கலைக்குழுவினர் மகளிர் குழு பிரேமா சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேரணி வடலூர் முக்கிய வீதிகளை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது இறுதியில் துணை செயலாளர் அருள் தீபன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment