தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் போதைப் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், ஜாபர் சாதிக் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மேலும் போதை பொருட்களில் தொடர்புடையவர்கள் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சூட் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்தார் மாநில மீனவர் அணி கே என் தங்கமணி மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜெ குமார் ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, முதுநகர் பகுதி செயலாளர் முன்னாள் கவுன்சிலர் வ.கந்தன் புதுப்பாளையம் பகுதி செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் வரதன் ஏழுமலை தமிழ் செல்வன் திரு(எ) ஸ்ரீநாத் மாமன்ற உறுப்பினர்கள் அலமேலு மணிமாறன் ஏ.ஜி.தர்ஷ்னா பகுதி துணைச் செயலாளர் எத்திராஜ் 21.வது வார்டு வட்ட செயலாளர் துரைராஜ் 19 வது வார்டு செயலாளர் அழகப்பன் 20 வது வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக பகுதி செயலாளர் மாதவன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை கடலூர் புதுப்பாளையம் பகுதியில் சரி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் புதிய எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் தின விழாவையொட்டி நடைபெற்ற விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வழங்கினர்.
No comments:
Post a Comment