கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள 72 அடி உயர ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக தில்லை காளியம்மனுக்கு சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது, தொடர்ந்து விநாயகர், அம்மன், பச்சைக்காளி ஆகிய வேடமிட்டு பம்பை இசை முழங்க காளி நடனம் நடைபெற்றது, பின்னர் மாசி மாதத்தில் நடைபெறும் மயான கொள்ளையின் போது ஆக்ரோஷத்துடன் அம்மன் சூரனை வதம் செய்வதை நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
இதனை கோயிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர் பின்னர் தில்லை காளி அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது, இறுதியில் 72 அடி உயர தில்லை காளியம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment