திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும் போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதற்கும் காரணமான திமுக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்மொழித்தேவன், கே.ஏ.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,
போதைப்பொருள் பழக்கத்தினால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, போதைப் பொருள் யார் விற்பனை செய்தாலும் அவர்களை கண்டறிந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க புகார் அளிப்பது நம் கடமை, வருங்காலத்தில் தமிழகம் போதை பொருள் அற்ற மாநிலமாக மாற எடப்பாடி யாரின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு நாம் அனைவரும் முழுமையாக பாடுபட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அமைப்பு செயலாளர் நா.முருகமாறன் மாநில மீனவரணி கே.என்.தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜெ குமார்,மாநில அம்மா பேரவை ஆர். வி. ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வழக்கறிஞர் எம்.பாலகிருஷ்ணன், இவர்களுடன் முதுநகர் பகுதி செயலாளர் வ.கந்தன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டனர்.
No comments:
Post a Comment