இதில் 240 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பொது சுகாதாரம் மூலம் 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண் துறையின் கீழ் 44 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 14 பயணிகளுக்கு தொழில் கடன் வசதி, மகளிர் திட்ட மூலம் 43 பயனாளிகளுக்கு வங்கி கடன், 1 பயனாளிகளுக்கு டிராக்டர் மற்றும் உழவு கருவிகள், மாற்றுத்திறனாளி துறையின் கீழ் 30 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பெண்களுக்கு தையல் இயந்திரம், முந்திரிக்கொட்டை உடைக்கும் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகள் உள்ளிட்ட சுமார் 964 பயனாளிகளுக்கு ரூபாய் பத்து கோடி இருபத்தெட்டு லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அரசு அதிகாரிகள், திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment