திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 March 2024

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது தமிழகம் போதை பொருள்களின் கேந்திரமாக விளங்குகிறது போதைப்பொருள் கடத்தல் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலைப்பு உள்ளதாக கூறி அதிமுக சார்பில் இன்று நடைபெற்று வரும் நிலையில் கடலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கடலூர் மாநகர திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில், திமுகவின் நிதிநிலை அறிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ள நிலையில் அதனை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறார் எனவும் குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது அதிமுக என்ன நடவடிக்கை எடுத்த கேள்வி எழுப்பினார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி கோரவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக போதை பொருள் கைப்பற்றப்பட்ட இடம் குஜராத் தான் என்றும் இந்தியாவில் போதைப் பொருட்களை கடத்துபவர்கள் பாஜகவினர் தான் என்று தன்னால் அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து அதற்குரிய பெயர் பட்டியலையும் பாரதி வெளியிட்டார். 


தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து ஏழாம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு விரைவில் நல்ல தகவல் கிடைக்கப்படும் எனவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார் அப்போது திமுக கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா உடனிருந்தார். 

No comments:

Post a Comment

*/