புவனகிரியில் தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி வரவேற்று வழிபட்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 March 2024

புவனகிரியில் தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி வரவேற்று வழிபட்டனர்.


கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீபூவராக சுவாமி மாசி மகத்தை முன்னிட்டு கிள்ளை அருகில் உள்ள கடல் தீர்த்தவாரிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற ஸ்ரீ பூவராக ஸ்வாமி தீர்த்தவாரி முடித்து திரும்பும் வழியில் அவருக்கு பல கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் ஆரவாரத்தோடு உற்சாக வரவேற்பு அளிப்பது வழக்கம்.

அதன்படி ஸ்ரீமுஷ்ணம் செல்லும் வழியில் உள்ள புவனகிரியில் ஸ்ரீ பூவராக சுவாமிக்கு பக்தர்களால் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. தனியார் மண்டபத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் சுவாமியை தரிசிப்பதற்குசுற்று வட்டாரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீ பூவராக சுவாமியை மனம் குளிர வணங்கியும்வழிபட்டும் சென்றனர். இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

*/