கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள எஸ் டி ஈடன் பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் தாளாளர் தீபக் தாமஸ் தலைமையில் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் கவிஞர் பா விஜய் கலந்து கொண்டு புதுமையும் புத்துணரும் கலந்த சிறப்புரையை நிகழ்த்தினார்.
தமிழ் ஆசிரியர் பாக்கியசாமி வரவேற்றார் பள்ளி துணை முதல்வர் ரம்யா ஆண்டறிக்கை வாசித்தார் மாணவிகள் அறிவடை மலர் நிஷாந்தினி நித்யஸ்ரீ விழாவினை தொகுத்து வழங்கினர் இதில் மழலை வரவேற்பு நடனம் மேற்கத்திய நடனம் பரதநாட்டியம் யோகா மௌன மொழி நாடகம் குழு நாடகம் கராத்தே போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தது சிறப்பு விருந்தினர் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இறுதியாக ஆங்கில ஆசிரியை ஆரோக்கிய கிரேசி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment