பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இந்திய அரசு நிறுவனமான தேசிய மின்சக்தி பயிற்சி மையம் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன மின்பொறியாளர்களளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது. அதன்படி, தமிழ்நாடு அரசின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பணியாற்றும் இளநிலைத் தொழில் பயிற்றுநர்களுக்கான ஒருவார காலப் பயிற்சி முகாமினை நடத்துகின்றது.
பயிற்சி முகாமில் தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட அரசு தொழிற் பயிற்சி மைய இளநிலைத் தொழில் பயிற்றுநர்கள் 20 பேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினைப் பெறுகின்றனர் என தெரிவித்தார், விழாவில் மின்சக்தி பயிற்சி மைய துணை இயக்குநர் ஆர்.இராமர் , துணை இயக்குநர் முனைவர் கெ.வெற்றிவேல், தேசிய மின்சக்தி பயிற்சி மைய அலுவர்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவன அலுவலர்கள், மின் உற்பத்தி பிரிவு அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment