குறிஞ்சிப்பாடியில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க .மருத்துவ அணி சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் சுப்ரமணியசாமி கோயில் அருகில் நடந்தது.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார் துணை அமைப்பாளர் டாக்டர் அவினாஷ் குமார் முன்னிலை வைத்தார் 7வதுவார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் வரவேற்றார். டாக்டர்கள் செல்வம் சிவ செந்தில் தினேஷ் ஆகிய கொண்ட மருத்துவ குழுவினர் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு நுரையீரல் பரிசோதனை தைராய்டு பரிசோதனை ஆகியவை செய்தனர் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் கோகிலா குமார் பேரூராட்சி செயலாளர் ஜெய்சங்கர் வடலூர் நகராட்சி சேர்மன் சிவக்குமார் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் சேகர் தமயந்தி செங்கல்வராயர் லட்சுமி திருஞானம் உமா மணிகண்டன் திலீபன் உமா கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment