தமிழ்நாடு காவல்துறையில் காவலராக 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக பணியாற்றி வந்த கனிமொழி என்பவர் மகப்பேரின்போது மாரடைப்பு ஏற்பட்டு, கடந்த 19.06.2023 அன்று இறந்துவிட்டார். 2011 பேட்ச் காவலர்கள் தமிழ்நாடு முழவதும் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஒருங்கிணைத்து இறந்து போன கனிமொழியின் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் பொருட்டு காக்கி உதவும் கரங்கள் 2011 குழு மூலம் ரூபாய் 25,53,900 நிதி திரட்டப்பட்டது.
இன்று 11.03.2024 தேதி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்களால் இறந்து போன கனிமொழியின் மகன் அர்ஷத் வயது 8, மகள் லிதன்யா 9 மாத கைகுழந்தை இவர்களின் பெயரில் எல்.ஐ.சி நிறுவனத்தில் ரூபாய். 25,00,000 காப்பீடு செய்யப்பட்டு காப்பீடு பத்திரம் மற்றும் ரூபாய். 53,900 காசோலையாக கனிமொழியின் பெற்றோர் வசம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் முகமது நிசார், காவலர்கள் அருண்குமார், இராமசந்திரன், நடராஜசுந்தரம், பெண் காவலர்கள் சத்யா, இராதா மற்றும் 2011 பேட்ச் காவலர்கள் உடனிருந்தனர். 2011 பேட்ச் காவலர்கள் இதுவரை 32 காவல் குடும்பத்தாருக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment