தமிழாசிரியர் பாக்கியசாமி வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் ரம்யா ஆண்டறிக்கையை வாசித்தார். மாணவர்கள் அறிவிடைமலர், நிஷாந்தினி, நித்யஸ்ரீ மூவரும்விழாவினை தொகுத்து வழங்கினர். மழலைகளின் வரவேற்பு நடனம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம், யோகா, மௌன மொழி நாடகம், குழு நடனங்கள் கராத்தே போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததாக அமைந்தது. மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சிஆசிரியர்கள் மிகவும் திறமையாகபயிற்சி கொடுத்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் டாக்டர் ஆர்.மணிமாறன் மற்றும் பல பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு மேலும் மெருகூட்டினர். படிப்பில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கினர். இறுதியாக ஆங்கில ஆசிரியை திருமதி ஆரோக்கிய கிரேசி நன்றியுரைவழங் க எஸ் டி ஈடன் பள்ளியின்ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment