கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வடக்கு சென்னி நத்தம்பகுதியில் அதிமுக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மினி வாட்டர் டேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சேத்தியாத்தோப்பு நகர அதிமுக செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதில் ஒன்றியப் பெருந்தலைவர் சி என் சிவப்பிரகாசம், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், முன்னாள் நகரச் செயலாளர் நன்மாறன், சர்புதீன், அண்ணா பிரபாகரன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச்செயலாளர் விநாயகமூர்த்தி,மாவட்டப் பிரதிநிதி தெய்வ.ராஜகுரு, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியின் பயனாளிகள், அதிமுக கட்சியினர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment