பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வம் வீட்டில் கடந்த மாதம் 28 ந்தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறித்து, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பண்ருட்டிக்கு நேரில் அவரது வீட்டிற்கு வந்து விபரம் கேட்டறிந்தார்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வம் வீட்டிற்கு நேற்று மாலை 3.45 மணியளவில் வந்தார். அவருடன் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழிதேவன் எம்..எல்.ஏ., கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ.,முன்னாள் நெய்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் ஆகியோரும் வந்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறித்து முன்னாள் நகர சபை தலைவர் ம.ப.பன்னீர்செல்வத்திடம் கேட்டறிந்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வமும் உடனிருந்தார். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment