சுமார் நூறாண்டுக்கும் மேலாக வீடுகளுக்கும் கடைகளுக்கும் முறைப்படியாகவரி செலுத்தியும்தமிழக அரசின் பதிவுத்துறையின் மூலம் பத்திரப்பதிவு செய்தும் குடியிருந்தும், வியாபாரம் செய்தும் வருவதாகவும் இந்நிலையில் தாங்கள் வசிக்கும் மற்றும் வியாபாரம் செய்து வரும் சில இடங்களில் முறைப்படி அளக்காமல் தாங்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இப்படி நூறாண்டுகளாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் குடியிருந்தும், அந்த குறிப்பிட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளில் தாங்கள் செய்யும் வியாபாரத்தை நம்பியே அவர்களது குடும்பமும் இயங்கி வருவதாகவும், திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ள உத்தரவினால் தங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்றும் கூறி அவர்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் வியாபாரம் செய்யும் கடைகள் ஆகியவற்றை முறையாக அளவீடு செய்து அதன் பிறகு வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தாங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டுள்ள அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment