கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள மஹா போதி வித்யாலயா & மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நேற்று மிக பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் முதலாம் ஆண்டு விழா அப்பள்ளியின் தாளாளர் நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த ஆசிரியர்கள் G.பாலகிருஷ்ணன், A.ஞானசேகரன், கணேசன், வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட மூத்த ஆசிரியர்கள் மற்றும் ஊர் தலைவர்கள் அனைவருக்கும் பள்ளி தாளாளர் நடராஜன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி.பள்ளி உதவி ஆசிரியர்கள்.வார்டு கவுன்சிலர் சரவணன். மாணவர்கள்.மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment