நெய்வேலியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 March 2024

நெய்வேலியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான் பட்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை என்எல்சி தலைவர் பிரசன்னா குமார் மோட்டுப்பள்ளி அவர்கள் தொடங்கி வைத்தார். 

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பொதுமக் கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது . அந்த வகையில் நெய்வேலி யில் வரும் 25 ம் தேதி நடை பெற உள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவையை என் எல் சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, தொடங்கி வைத்தார். 


நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் , மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் ஆகியோர் உடனிருந்தனர் நெய்வேலியில் உள்ள பேருந்து நிலையம், திடீர் குப்பம், மந்தாரகுப்பம் மற்றும் இந்திரா நகர் ஆகிய வழித்தடங்களிலும் பொதுமக்கள் அனைத்து  இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் இதனை வில்லூடையான்பட்டு கோயில் வளாகத்தில் என்.எல்.சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


வில் உடையான் பட்டு  பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இந்த புதிய இலவச பேருந்து சேவையை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது மேலும் பங்குனி உத்திர திருவிழாவின் போது பொதுமக்களின் கூட்டத்தை பொறுத்து மேலும் பேருந்து சேவை அதிக அளவில் நீட்டிக்கப்பட உள்ளது என்று என்எல்சி இந்தியா தலைவர் பிரசன்னா குமார் மோட்டு பள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார், இந்த இலவச சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். 


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி

No comments:

Post a Comment

*/