சேத்தியாத்தோப்பில் புவனகிரி எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட குடிநீர் டேங்க் திறந்து வைக்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 March 2024

சேத்தியாத்தோப்பில் புவனகிரி எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட குடிநீர் டேங்க் திறந்து வைக்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 1வது வார்டு பகுதியில் அதிமுக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மினி குடிநீர் வாட்டர் டேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 

அதிமுக வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன்  பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.


இதில் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சி என் சிவப்பிரகாசம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், முன்னாள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் பட்டு. கணேசன், முன்னாள் சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் நன்மாறன், மாவட்ட பிரதிநிதி தெய்வ .ராஜகுரு, லலிதா உள்ளிட்ட  கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/