வடலூர் திமுக நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் கவிஞர் சல்மா மற்றும் திமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநாற் கிள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திமுக அரசின் சாதனையை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்
பின்னர் பொதுமக்கள் மத்தியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில் தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செய்து வருகிறது குறிப்பாக குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம், அரசு கலைக் கல்லூரி மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் விதமாக இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கியது திமுக ஆட்சியில் தான் என்றார்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை தரம் உயர்த்தப்பட்டு 100 கோடி செலவில் புதிய சர்வதேச மையம் அமைக்கப்பட உள்ளது, வடலூர் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியை குறை கூறிவரும் அதிமுக மற்றும் பாமகவினர் குறித்து பேசுகையில், திமுகவின் சாதனைகளை கண்டு பொறாமை பட்டு திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள் திமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
வடலூரில் பாமக நடத்திய கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை தயவு செஞ்சு நிறுத்திடுங்க வள்ளலார் மண்ணுல பாவம் செய்யாதீங்க வள்ளலார் தண்டிச்சிருவார் மீறி சர்வதேச மையத்தை அமைத்தால், மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பேசிய நிலையில் சர்வதேச மையம் கண்டிப்பாக அமைக்கப்படும் எந்த போராட்டம் வெடித்தாலும் பாத்துக்கலாம் இதற்கெல்லாம் பயந்தவங்க நாங்க இல்ல வள்ளலாரை உலகறிய செய்ய வள்ளலார் இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்பட்ட உள்ளது.
எனக்கு 65 வயசு ஆகுது இதுக்கு அப்புறம் வள்ளலார் என்னை என்ன தண்டிக்க போறாரு, திமுகவை போதை கட்சி என்று விமர்சிக்கும் அதிமுக அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் குட்கா வழக்கில் சிக்கியவர். குட்கா போதையில்லையா அது வெற்றிலை பாக்கா என்று நகைச்சுவையாக பேசினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியின்போது கொண்டு வந்த திட்டங்களே திமுகவை வெற்றி பெற செய்யும் என்று தெரிவித்தார்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி
No comments:
Post a Comment