நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 March 2024

நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மந்தாரகுப்பம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மையம் மாவட்ட கம்மாபுரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளூமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வேண்டும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின்படி  விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து வாக்கு சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் விசிக மேலிட பொறுப்பாளர்கள் இரா.கிட்டு,பாவரசு,விடுதலை செழியன்,  ராஜ்குமார்,அய்யாயிரம் கடலூர் மையம் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.                


- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.

No comments:

Post a Comment

*/