மருதூர் ஊராட்சியில் மகளிர் சுய சார்பு குழுவினர் பதினோரு குழுவாக ஒவ்வொரு குழுவிலும் 13 நபர்ககளை கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாடு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மருதூர் ஊராட்சியில் கரவை மாடு வளர்ப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதுகுறித்து வெளிப்படையாக இதர மகளிர் குழுவினர்களுக்கு தெரிவிக்காமல் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் பாரபட்சத்துடன் பயிற்சி குறித்து தாங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து 30 நபர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு திட்டத்தின் மூலம் சில்வர் வாலி வழங்கியதால் மீதமுள்ள மகளிர் சுய சார்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து கிராம இ சேவை மையத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்தணிக்கை குழு சிறப்பு கிராம கூட்டத்தை புறக்கணிக்க அங்கிருந்து சுய உதவி குழு உறுப்பினரிடத்தில் பெண்கள் வாக்குவதில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சியில் பரபரப்பு காணப்பட்டது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் குறித்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மகளிர் சுய குழுவில் முறைகள் நடப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். அங்கிருந்து அதிகாரிகள் கிளகிளம்பி சென்றனர்.

No comments:
Post a Comment