புவனகிரி அருகே ஜல்லிகள் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் சாலை பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதி உயிர் பலி ஏற்பட்டும் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 March 2024

புவனகிரி அருகே ஜல்லிகள் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் சாலை பணி நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதி உயிர் பலி ஏற்பட்டும் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குமுடி மூலை கிராமத்திலிருந்து இருந்து கொத்தவாச்சேரி செக்போஸ்ட் வரையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்கும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது, இந்நிலையில் புதிய சாலை அமைப்பதற்கு முதற்கட்டமாக  ஜல்லிகளை கொட்டப்பட்ட நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் சாலை அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படாததால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு   இளைஞர் ஓருவர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையின் காரணமாக புவனகிரி சென்று  இச்சாலையின் வழியாக  தனது நத்தமேடு  கிராமத்தை நோக்கி சென்ற பொழுது ஜல்லி கற்களில் ஏறி இருசக்கர வாகனம் சரிக்கியதில் நிலைத்தடுமாறி ரோட்டில் நிறுத்தப்பட்ட லோலரில் அடிப்பட்டு  விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிர் பலி ஏற்பட்டும் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வரும் மேல்பவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது  கிராம மக்கள் இடையே முகசூழிப்பை ஏற்படுத்தி உள்ளது விரைவில் சாலையை சீரமைத்து தரும்படி அப்பகுதி  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

*/