கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே எசனை கிராமப் பகுதியில் விவசாயிகள் பலருக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு கிடைக்காமல் இருந்து வருகிறது.வீராணம் ஏரி கடைமடை பாசனத்தை நம்பி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமியம் தவறாமல் கட்டியும் தங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டு பயிர் காப்பீடு அறுவடை பரிசோதனையை காப்பீட்டு நிறுவனம் செய்ய மறுப்பதாக கூறும் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்யாததால் அறுவடை நாட்களை தாண்டியுள்ளதால் கதிர்கள் முற்றி வயலிலேயே சேதமாகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் தங்களுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு என்பது உயிரூட்டுவது போன்றது ஆகும். உடனடியாக தங்களது கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment