இந்நிகழ்ச்சியினை மைமூன் பள்ளி இமாம் மௌலாவி ஷேகுல் அமீன் ஹஸனீ அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தனர் சபீலுல் ஃபலாஹ் தாஃவா குழு நிறுவனர் எஸ்.முஹம்மது அலி கான் தொகுப்புரையாற்றினார் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் உபத் தலைவர் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் ஜி.எம்.தல்பாதர் மரைக்காயர். டாக்டர் எஸ்.நூர் முஹம்மது. டாக்டர் ஏ.கே.அப்துல் காசிம் ரஹ்மான் ஆகியோர் ஏழைகளுக்கு வீட்டு சாவினை வழங்கினர்.
மேலும் பரங்கிப்பேட்டையில் சமூக சேவைகளை பாராட்டி ஸ்ரீ காயத்ரி வித்யாலயா மழலையர் பள்ளி. பரங்கிப்பேட்டை காதிரியா ஜமாஅத். பயணியர் நல சங்கம். GTC நிர்வாகிகள். சமூக ஆர்வலர் கா.மு.கவுஸ் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது ஜி.எம்.தல்பாதர் மரைக்காயர். ஆடிட்டர் ஐ.முஹம்மது இலியாஸ். ஓய்வு தாசில்தார் ஓ.முஹம்மது கவுஸ். பி.எம் ஹமீது கவுஸ்.B.M.H. பாவாஷா மரைக்காயர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பினராக திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள்.பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர். திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர்.சிதம்பரம் ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் காதர் மரைக்காயர் உமரி .SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.ஹமிது ஃப்ரோஜ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு ரமேஷ் பாபு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி முடிவில் எம்.எஸ்.ஹாஜா மொய்தீன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment