என்.எல்.சி சுரங்கம் 1ஏ ஒட்டிய பகுதியில் காட்டு கொல்லை கிராமம் அருகே குப்பையை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் என்எல்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 March 2024

என்.எல்.சி சுரங்கம் 1ஏ ஒட்டிய பகுதியில் காட்டு கொல்லை கிராமம் அருகே குப்பையை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் என்எல்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி உட்பட்ட காட்டு கொல்லை அய்யனார் கோவில் பகுதியில் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் சேமிக்கப்படும் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் குடியிருப்பு பகுதி அருகே குப்பைகளை கொட்டுவதால் நோய் தொற்று பரவும் நிலை தொடர்கதை ஆகி வருவதாக கூறி காட்டு கொல்லை கிராம மக்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வடலூர் நகராட்சி குப்பை அல்லும் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது தொடர்பாக நேற்று ஊர் கூட்டம் முடிவு செய்யப்பட்டு என்.எல்.சி நிர்வாகத்திடம் இதுகுறித்து மனு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதனைத் தொடர்ந்து இன்று நெய்வேலியில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எல்.எல்.சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் அருகாமையில் உள்ள அய்யனார் கோவில் அருகே என்எல்சிக்கு சொந்தமான சுரங்கம் 1ஏ ஒட்டி உள்ள பகுதிகளில் வடலூர் நகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை கொட்டி வருகிறது இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை தொடர்கிறது. எனவே வடலூர் நகராட்சி குப்பைகளை கொட்டுவதை என்எல்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/