கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் இருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.சி கோவிலாங்குப்பம் கிராமத்தில் உள்ள மிகவும் பழமையான புனித சவேரியார் ஆலய உள்ளது இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ஆம் தேதி புனித பிரான்சிஸ் சவேரியாரின் ஆடம்பர தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்தாண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீரா ரெட்டி குப்பம் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அவர்கள் சவேரியார் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் உருவம் பதித்த கொடி ஏற்றி வைத்தார், முன்னதாக நடைபெற்ற சிறப்பு கொடியேற்று விழாவிற்கான சிறப்பு திருப்பலியில் திரளான கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர் பின்னர் ஊர் பொதுமக்கள் பிரான்சி சவேரியார் உருவம் பதித்த கொடியை ஆலயத்தைச் சுற்றி எடுத்து வந்து ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
No comments:
Post a Comment