கடலூர் மாவட்டம் வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது பேரவை தலைவர் கல்விராயர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்தியன் ஆயில் நிறுவன புதுச்சேரி விற்பனை மேலாளர் சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என தெளிவாக எடுத்துரைத்தார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் அலுவலர் R.பவானி மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் இனைத்து சிறுதானிய வகைகள் மற்றும் இயற்கை காய்கறிகள் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மற்றும் வடலூர் தைப்பூச தன் ஆர்வலர்கள் ஆக சிறப்பாக பணியாற்றிய கல்லூரி மாணவ மாணவிகளுக்கான நற்சான்றிதழ் வழங்கும் முப்பெரும் விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.சரளா அவர்கள் வரவேற்பு உரையுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் அடுத்ததாக உணவு பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கடலூர் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை Dr.PK.கைலாஷ்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து விழா உரையில் மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ள வகையில் தகவல்களை வழங்கினார்.
இவ்விழாவில் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, குறிஞ்சிப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் கல்லூரி NSS அமைப்பாளர் பேராசிரியர் ஜமுனாராணி அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து மாணவ மாணவியர்களுக்கு நல்ல சிறந்த தகவல்களை வழங்கினார்கள். இவ்விழாவில் வடலூர் நுகர்வோர் பேரவையின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா முன்னிட்டு வடலூர் சித்தார்த்ராஜ் அறக்கட்டளை நிறுவனர் C.T.நடராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ப. சரளா மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் அலுவலர் R. பவானி அவர்களை கௌரவ படுத்தி சிறந்த ஆளுமைக்கான விருதும் நமது பேரவையின் செயலாளர் வீ.வினோதினி அவர்களுக்கு சாதனை பெண்மணி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ்விழாவில் நமது பேரவையின் செயல் தலைவர் முனைவர் V.K.பாலமுருகன், செயலாளர் வீ.வினோதினி, துணைத்தலைவர் G.முருகானந்தம் இணைச் செயலாளர் ஆ. இராஜன்பாபு ஒருங்கிணைப்பாளர் T.இராஜசேகரன் அலுவலக செயலாளர் M.சிவரஞ்சனி மற்றும் பேரவை நிர்வாகிகள் கல்லூரியின் பேராசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவில் நமது பேரவையின் தலைவர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் வடலூர் தைப்பூச தன்னார்வ மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். நிறைவாக பேரவையின் செயல் தலைவர் முனைவர் VK. பாலமுருகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்
No comments:
Post a Comment