கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தேரடி தெருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி 50 ஆண்டுகளுக்கு முன் திமுக செய்த திட்டங்களை தற்போது செய்யப் போகிறோம் என பிரதமர் மோடி கூறி வாக்கு கேட்கின்றார், மற்ற கட்சிகளில் வெற்றி பெற்று வருபவர்களை பணம் கொடுத்து வாங்கும் வேலையை தான் மோடி செய்கிறார் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களை பிடிக்கும் எனவும் அதில் திமுக தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெறும் என தெரிவித்தார்.மேலும் திமுக வரலாறு தெரியாமல் மோடி பேசுகின்றார் எனவும் திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை எனவும் ஆவேசமாக பேசினார். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் சலீம், வழக்கறிஞர் கே.எஸ்.ஆர்.கார்த்திக், மாவட்ட மாணவரணி கே.எஸ்.ஆர்.பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி பிரவின் ,சரத்குமார் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment