நெய்வேலியில் புகழ்பெற்ற வில்லுடையான் பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 March 2024

நெய்வேலியில் புகழ்பெற்ற வில்லுடையான் பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் .


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புகழ்பெற்ற வில்லுடையான் பட்டு முருகன் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்  பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெய்வேலி நகருக்கு வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் நடைபெற்றது..

வில்லுடையான் பட்டு முருகன் கோவிலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து வரைபடம் மூலம் அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது, மேலும் கூட்டத்தில் பத்திரிகையாளரிடம்  நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு குற்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் தெப்ப குளம் திருவிழாவின்போது குளத்தில் குளிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களின்  பாதுகாப்பு கருதி நீச்சல் பயிற்சி கொண்ட பயிற்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார், கூட்டத்தில் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர், வில்லூடையான் பட்டு முருகன் கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் , தீயணைப்பு துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-  நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி 

No comments:

Post a Comment

*/