கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழக அரசு மூலம் முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்குட்பட்டோருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் வாயிலாக கற்போருக்கு தன்னார்வலர்கள் வழியாக பயிற்சி வழங்கப்பட்டது இப்பயிற்சியினை செப்டம்பர் 1 முதல் மார்ச் 16 வரை 73 மையங்களில் 1410 கற்போருக்கு அளிக்கப்பட்டது தொடர்ந்து 17.3.24 அன்று அந்தந்த மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நடத்திய தேர்வு நடைபெற்றது.
அனைத்து கற்போரும் தேர்வை உற்சாகத்துடன் எழுதினர் புவனகிரி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்வை வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர் அனைத்து மையங்களிலும் தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் தன்னார்வலர்கள் தேர்வினை நடத்தினர்.
No comments:
Post a Comment