வாகன சோதனையில் ரூ.2.48 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 March 2024

வாகன சோதனையில் ரூ.2.48 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.79 இலட்சம் மற்றும் ரூ.68 ஆயிரத்து 998 மதிப்புள்ள பெருங்காய தூள், கட்டி பறிமுதல்  செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை தேர்தல் கண்காணிப்பு குழு பண்ருட்டி ஊரகம் துணை மாநில வரி அலுவலர் சிவபெருமாள் தலைமையில் கேமரா பொருந்திய வாகனங்கள் உடன்  வெ.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கைப்பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.79 லட்சம் பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது.இதையடுத்து விசாரணை நடத்தியதில் குள்ளஞ்சாவடி அருகே வசனாங்குப்பம் பகுதியை சேர்ந்த தனசேகர் மகன் வினோத்குமார் 32;என்பதும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அசோகனிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர்.


இதைப் போன்று நிலையான தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தார் அமர்நாத் தலைமையில் கேமரா பொருந்திய வாகனங்கள் உடன் பட்டிக்குப்பம் ஜங்ஷன் ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பெருங்காயம் தூள் மற்றும்  கட்டி ரூ 68,998 மதிப்புள்ள பொருட்களை எடுத்து வந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமசாமி மகன் அருள் என்பவரிடம் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 

No comments:

Post a Comment

*/