கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் மரியாதை பந்தல் சுவாமி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி மாசி மகத்தை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமத்தின் வழியாக பக்தர்கள், பொது மக்கள் வரவேற்புடன் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு செல்வது ஆண்டாண்டு தோறும் நடக்கின்ற வழக்கம். அதன்படி மாசி மகத்தன்று கிள்ளையில் தோன்றி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்தில் பூவராகசுவாமி காட்சியளித்தார்.
பின்னர் தீர்த்த வாரி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு அவர் திரும்பினார். அதன்படி வரும் வழியில் உள்ள பாரம்பரிய வரவேற்பாளர்கள், பொதுமக்கள், பக்தர்கள் அந்தந்தப் பகுதிகளில் உற்சாகமாக வரவேற்பு அளித்து வழிபாடு செய்தனர். அதன்படி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தின் வழியாக ஸ்ரீ பூவராக சுவாமி பல்லக்கில் வந்தபோது அப்பகுதியில் உள்ள வழிபாட்டாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் சுவாமிக்கு சூடம், வெற்றிலை பாக்கு, பழம், பூக்களுடன் வரவேற்பு அளித்து படையல் செய்து வழிபட்டனர். மேலும் தொடர்ச்சியாக செல்லும் அனைத்து இடங்களிலுமே பூவராகசுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment