வடலூரில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகத்தை, அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 March 2024

வடலூரில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகத்தை, அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.


கடலூர் மாவட்டம் வடலூரில்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், வடலூர் நகராட்சியில் ரூபாய் 3.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கல்வி குழுத்தலைவர் பொறியாளர் சிவகுமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர மன்ற துணைத் தலைவர் சுப்ராயலு வடலூர் நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் வடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு கவுன்சிலர்கள், வடலூர் நகராட்சி அலுவலர்கள், திமுக கட்சி பிரமுகர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர், நிகழ்வில் இறுதியில் வடலூர் நகராட்சி ஆணையர் குணசேகரன் நன்றி கூறினார், நிகழ்வில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/