நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்த விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 March 2024

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்த விழா.


நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்த விழாவில் பேசிய சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசும்போது நெல்லிக்குப்பத்தில் சாலை வசதி சரியில்லை. குடிநீர் தட்டுப்பாடும் இருக்கிறது. மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தைப் பெற்றுத் தந்த பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் அலுவல் காரணமாக சென்னை சென்றுள்ளவருக்கும் நகராட்சி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி.கணேசன் பேசியதாவது: தமிழக முதல்வர் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட பார்த்து அந்த மாநிலத்தில் செயல்படுத்தி உள்ளார். மற்ற மாநிலங்களில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டமும் பின்பற்றுகின்றனர். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்  பல்வேறு அலுவல் காரணமாக முதல்வரை சந்திக்க சென்றுள்ளார்.  ஆஸ்பத்திரி வர காரணமானதால் அவருக்கும் நன்றி. கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது ஆப்ரேஷன் செலவு எவ்வளவு என்று கேட்டார். 

ரூபாய் 3 லட்சம் என்று நிர்வாகம் கூறியதாகவும் அதன்காரணமாக முதல்வராகிய நாம் 3 லட்சம் ரூபாய் செலுத்த முடியும் கிராமங்களில் உள்ள ஏழை மக்களால் முடியும் என்று நினைத்து விரைவில் சாதாரணமாக கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் பயனளிக்கும் விதமாக கலைஞர் காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம், ரூபாய் 5 கோடியில் மாவட்டத்தில் 10 ஆயிரம் நலத்திட்ட உதவி அளித்திருக்கிறோம். கூடுதலாக நலத்ததிட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க எம்எல்ஏ தொகுதி நிதியை அளிக்க வேண்டும். 


30-வது வார்டு மட்டுமின்றி 2024 டிசம்பருக்குள் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நிறைவேற்ற கூடிய தெரு சாலை, குடிநீர் வசதி  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவாக செய்து தரப்படும். இருந்தும் நெல்லிக்குப்பம் நகராட்சி மட்டுமின்றி மாவட்டத்தில் எங்குமே தண்ணீர் பஞ்சம் இல்லை் இல்லவே இல்லை (சேர்மன் சொன்ன உண்மையை மறைக்க முயன்றார்) என்றார்.


ஆனால் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் தான் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் இரண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டி இருப்பது, குடிநீர் பஞ்சம் இருப்பதை மெய்யென தெரிவிக்கிறது. கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி, ராஜாராமன், நகராட்சித் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையர் கிருஷணராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/