கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சொகுசு கார் ஒன்றுசென்று கொண்டிருந்தது. அப்போது குமாரக்குடி குறுகிய வளைவுபாலத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சொகுசு கார் வீராணம் ஏரியின் 20 அடி ஆழமுள்ள வடிகால் வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக ஓட்டுநர் இளஞ்சேரலாதன்(53) எவ்வித ஆபத்துமின்றி உயிர்த்தப்பினார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குறுகிய ஆபத்தான இந்தப்பாலப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் விபத்துகளால் வாகன ஒட்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஒருவித பயத்திலேயே கடந்து வருகின்றனர். பலமுறை பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு வைக்கும் இப்பகுதி மக்கள் தற்காலிகமாக பாலத்தின் இரண்டு பக்கமும் இரண்டடுக்கு வேகத்தடை அமைத்திட வேண்டுமெனவும் விரைவில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment