கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பங்கர் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை எனவும், AMC தொழிலாளராக மாற்ற கோரி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போனஸ், அரியர் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும், கன்வேயர் பெல்ட் ஓடும் போது அருகில் நின்று வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், அதிகாரிகள் தரை குறைவாக, தொழிலாளர்களை பேசுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி
No comments:
Post a Comment