கடலூர் மாவட்டம் வடலூர் காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே பள்ளி மாணவன் ஒருவரிடம் தம்பதியினர் இருவர் வள்ளலார் கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற முகவரி கேட்டு அவருக்கு தேங்காய் வரிக்கி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் தொடர்ந்து அம்மாணவனை பின்தொடர்ந்த அவர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது பின்னர் அவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து விசாரித்தனர் பின்னதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, புதுச்சேரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வடலூர் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment