கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(25) என்பவருக்கும், குமராட்சி அருகே உள்ள நடுத்திட்டு பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மணிமேகலை கணவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணின் குடும்பத்தினர் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் கணவர் கார்த்திகேயனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment