தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க படுகிறதா? மற்றும் எடுத்து செல்லப்படுகிறதா என குறிஞ்சிப்பாடி நிலையான தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தார் அமர்நாத் தலைமையில் கேமரா பொருந்திய வாகனங்கள் உடன் பட்டிப்பாக்கம் ஜங்ஷன் ரோடு அருகில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.69,500 பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது.இதையடுத்து விசாரணை நடத்தியதில் பண்ருட்டி சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் பிரபாகரன் என்பதும் அவரிடம் இருந்து ரூ.69, 500 பணத்தை பறிமுதல் செய்தனர்.பின்னர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இதே போன்று பறக்கும் படை தேர்தல் கண்காணிப்பு குழு பண்ருட்டி ஊரகம் துணை மாநில வரி அலுவலர் சிவபெருமாள் தலைமையில் கேமரா பொருந்திய வாகனங்கள் உடன் காரைக்காடு பிள்ளையார் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியதில் கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரத்தை சேர்ந்த முனுசாமி மகன் சந்துரு என்பதும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment