நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வீராணம் ஏரியிலிருந்து செல்லாமல் கடலூர் மாவட்ட வாலாஜாஏரி மற்றும் போர்வெல்லிருந்துஅனுப்பப்படுகிறது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வீராணம் ஏரியிலிருந்து செல்லாமல் கடலூர் மாவட்ட வாலாஜாஏரி மற்றும் போர்வெல்லிருந்துஅனுப்பப்படுகிறது.


கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து தரை தட்டியதால் சென்னைக்கு ஏரியிலிருந்து குடிநீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 38.85 அடி. மொத்த நீர்மட்டம் 47.50 அடி. ஏரிக்கு நீர்வரத்து இல்லை. மேலும் இதற்கு மாற்றாக சென்னை குடிநீருக்காக என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை தேக்கி வைக்கும் வாலாஜா ஏரி, மற்றும் இதன் அருகே பல்வேறு இடங்களில் உள்ள பத்துக்கும்மேற்பட்ட ராட்சச போர்வெல்கள் மூலம் என வினாடிக்கு சுமார் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என்பதால் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் வீராணம் ஏரி தரை தட்டியதால் ஏரி நீர் வற்றி மண்மேடுகளாக காட்சியளித்து வருகின்றன. ஏரியின் நடுவே தண்ணீர் இல்லாத திடல் போன்ற திட்டுகளில் சிறுவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதே நாளில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் நிறைந்து கடல் போல் காட்சி அளித்த ஏரியின் இன்றைய நிலை பரிதாபமாக காட்சியளித்து மனதுக்கு வேதனை தருவதாக உள்ளது.அதேபோல் இதனுள் மனிதர்களால் உபயோகித்து தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள், பழைய துணி வகைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் குவிந்துள்ளன. இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள்வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/