குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு தையற்கலை முன்னேற்ற சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் அமைதி பேரணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2024

குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு தையற்கலை முன்னேற்ற சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் அமைதி பேரணி.


தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தையற்கலை  முன்னேற்ற சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.


.தையற்கலை  முன்னேற்ற சங்க குறிஞ்சிப்பாடி கிளைத் தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர்கள் பெருமாள் ,குமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியில் துவக்கி வைத்தனர்


முன்னதாக குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தையல் தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து அமைதி பேரணியாக குறிஞ்சிப்பாடியில் உள்ள முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று இறுதியில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர், பின்னர் பேருந்து நிலையத்தில் தையல் கலைஞர் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

*/