தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திமுக பரங்கிப்பேட்டை நகர சார்பில் பரங்கிப்பேட்டை சஞ்சீவி ராயர் கோவில் அருகே ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமையில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பழம்.பிரட் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர்.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் தலைவர் ஆனந்தன்.செயலாளர் சாலியா மரைக்காயர். திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ஜாபர் ஷெரீஃப்.தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் ஷே.அப்துல் முனாப்.திமுக வார்டு கவுன்சிலர்கள்.திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல்.கழக நிர்வாகிகள். இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் சாதிக் அலி

No comments:
Post a Comment