கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு என்கிற இடத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரவனாற்றில் பழமையானவலுவிழந்த பாலம் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கிய போக்குவரத்துப் பகுதியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் அருகில் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய பாலம் அமைப்பதில் தாமத நிலை ஏற்பட்டு வருவதால் இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுவற்றில் மோதி சேதப்படுத்தி வருகின்றன.
இதுபோன்று ஏற்கெனவேபல தடவை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது, இவ்வாறான சூழலில் சாலைப் பணிக்காக தார் ஜல்லி கலவை ஏற்றி வந்த கனரக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றின் மீது ஏறி சிக்கிக் கொண்டது. அப்போது ஓட்டுனர் லாரியிலிருந்து சமயோசிதமாக கீழே குதித்தார்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டது. இரண்டு பக்கமும் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கும் போது நான்கு வழி சாலை விரிவாக்கப் பணியில் உள்ள பாலத்தை விரைந்து கட்டி முடித்தாலே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்றும் உடனே புதியபாலத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment