திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2024

திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பங்கேற்பு.

photo_2024-02-12_12-59-24

கடந்த 09.02.2024 அன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவுரை படியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் வழிகாட்டுதலின் படியும் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் பண்பாட்டுப் பாசறை விழாவில் தலைமை தாங்கிய வேளாண்மை துறை அமைச்சர்  எம் ஆர் கே பன்னீர்செல்வம்  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர்களின் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் இவ்விழா துவங்கப்பட்டது சைபர் கிரைம் சம்பந்தமாக அமைச்சர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு இணைய வழி கூட்டம் பற்றி விளக்கப்பட்டதுசைபர் கிரைம் விழிப்புணர்வு 1500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் கலந்து கொண்டனர்.

photo_2024-02-12_12-59-27

சைபர் கிரைம் போலீசாருக்கு ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது அங்கு வந்திருந்த அமைச்சர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு இணையவழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும்,   OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், குறிப்பாக போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி தொடர் பான Link ல் செல்ல கூடாது,  மற்றும் தற்போது பெருகி வரும் E CHALLAN FRAUD,  EB BILL Fraud, Part Time Job Fraud  குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து  சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள்  வழங்கப்பட்டன.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment

*/