கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் பாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமையில் நடைபெற்றது, விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராசு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலதி முன்னிலை வகித்தனர், முதுகலை ஆசிரியர் காயத்ரி வரவேற்றார், விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் கடந்த கல்வியாண்டில் முதன்மை இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி நடராஜன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கவிஞர் ம. ரா. சிங்காரம், தொலைத்தொடர்பு துறை கணக்கு மற்றும் நிதி அலுவலர் சாந்தகுமார், அசோகன், ஜெயராமன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் ஓய்வு சம்பத், தானராஜ், சுந்தரவடிவேல், கடலுர் ரோட்டரி முன்னாள் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், முதுகலை ஆசிரியர் எஸ் குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment