கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை அடுத்துள்ள சில பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா வகை பாக்குகள்விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் சேத்தியாத்தோப்புப் பகுதியில் ஒரு பெட்டிக்கடை, மற்றும் கீழ்பாதியில் ஒரு கடை,, வளையமாதேவியில் ஒரு கடை என மொத்தம் மூன்று கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் சுப்பிரமணியன், சேத்தியாத்தோப்பு சிறப்பு காவல் ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்தஅந்த மூன்று கடைகளுக்கும் 20.2.24 இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சேத்தியாத்தோப்பு சிறப்பு காவல் ஆய்வாளர் அண்ணாமலை உடன் இருந்தார்.
சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இனிமேல் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உங்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும், இந்த புகையிலை பொருட்களை உபயோகிப்பவர்கள் பலவித உடல் நோய்களுக்கு ஆடப்படுகிறார்கள் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களால் கடைக்காரர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment